மயிலாடுதுறை, நவம்பர்- 02;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலமாக இங்கு மழை இல்லாவிட்டாலும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரி நீரால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து
உதவிகளையும், போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த அனைத்து துறையை சார்ந்த அலுவலர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கினார். மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொன்னதை போல மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொது தொலைபேசி எண் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், பேரிடர் மேலாண்மை அலுவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். சென்னையில் கனமழை பெய்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இன்று சென்னை மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் எடுத்த துரித நடவடிக்கையால், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர்.
அதுபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து தண்ணீர் சாலைகளில் தேங்கி இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது, இந்த அறை 24 மணி நேரமும் செயல்படும். நம்முடைய கவனத்திற்கு வரும் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும். தொலைபேசி மூலமாகவோ. வாட்ஸ்அப் வழியாகவோ வரக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூரியது போல எந்த பகுதியிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனுக்குடன் சரிசெய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட உயர் தலைமையில் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆகியோ கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கட்டுப்பாட்டு அறை, பொது தொலைபேசி எண் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. பாதிப்பை மீட்டெடுக்கவும். நோய் தடுப்பு பணியை மேற்கொள்ளவும், மின் பழுதை போக்கவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சொன்ன கருத்துக்களை கவனத்தில் கொள்ளப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். கடந்த காலங்களில் எந்தெந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர். செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் என்.செல்வராஜ். மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவலர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.பாலாஜி. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கனகராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வே.சண்முகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) ரவிக்குமார், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்