தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் A.கயல்விழி உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் F.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தஞ்சாவூர் சரக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேளாங்கண்ணி காவல் எல்லைக்குட்பட்ட பாலாகுறிச்சி அருகே கண்காணித்து வந்த போது MH 14 CP-0539 என்ற கண்டெய்னர் வண்டியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி குட்காவை கடத்தி வந்த பாலாகுறிச்சி மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவாஸ்கர், மற்றும் கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த புத்தேகவுடா மகன் பிரதீப் ஆகியவர்களை பிடித்து விசாரிக்கும் போது கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் குட்காவை கடத்திவந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் கண்டெய்னர் லாரியை சோதனை செய்த போது சுமார் 2078 கிலோகிராம் எடை கொண்ட சுமார்-50,00,000/- மதிப்புள்ள குட்காவையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களையும் கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் சரக தனிபடையினரை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் A.கயல்விழி பாராட்டினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்