0
0
Read Time:1 Minute, 4 Second
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், 33 பேர் அமைச்சர்களாகவும் இன்று காலை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் பதவி ஏற்றனர். முதலில் நீர்வளத்துறை அமைச்சராக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே.என்.நேருவும், கூட்டுறவுத்துறை அமைச்சராக இ.பெரியசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சராக க.பொன்முடியும், பொதுப் பணித்துறை அமைச்சராக எ.வ.வேலுவும், வேளாண்மைத் துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும், வருவாய்த் துறை அமைச்சராக ராமச்சந்திரன் உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.