0 0
Read Time:2 Minute, 22 Second

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நோய் பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக நேற்று முதல் வருகிற 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். 

50 சதவீத இருக்கைகளில்

பயணிகள் ரெயில், பஸ்கள் மற்றும் வாடகை கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகளை தவிர, மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் பகல் 12 மணிக்கு மேல் திறக்க அனுமதி கிடையாது.மீன், இறைச்சி கடைகள் காலை 4 மணி முதல் பகல் 12 வரை மட்டுமே இயங்க வேண்டும் என்பது உள்பட பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. 

அனைத்து கடைகளும் அடைப்பு

இதனால் மயிலாடுதுறை நகரில் நேற்று காலை முதல் பொது மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பின்னர் பகல் 12 மணி அளவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.. இதனால் மயிலாடுதுறை நகரம் முழுவதும் சாைலகள் வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டும் அதில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதேபோல சீர்காழி நகரத்திலும், குத்தாலம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் போன்ற பேரூராட்சி பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %