செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்
தரங்கம்பாடி,நவ.15: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்னங்குடி, கீழையூர், கிடாரngகொண்டான், பொன்செய், தலைச்சங்காடு காந்திநகர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து கீழையூர், கிடாரங்கொண்டான், புன்செய்,
தலைச்சங்காடு காந்திநகர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவருடன் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்