தரங்கம்பாடி,நவ.17: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் வீடு வீடாகசென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் பொது மக்களிடம் வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து திருக்கடையூர், பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்க பங்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவருடன் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன் ஏ.ஆர்.ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமாலதி சிவராஜ், தீபா முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எழில்நம்பி, விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்