0 0
Read Time:2 Minute, 26 Second

தரங்கம்பாடி,நவ 18:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், T.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், தாழம்பேட்டை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் விளைநிலங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார்.

அதைதொடர்ந்து மாணிக்கபங்கு, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளகோவில் ஆகிய மீனவர் கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மீனவர்கள் மீன்பிடி வலை பின்னும் தளம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ விரைவில் தங்களுக்கு தளம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று கூறினார்.

ஆய்வின்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தீபா முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எழில் நம்பி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %