சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் ச. பிரகதீஸ்வரன் தலைமை தாங்கினார்.
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் துறைத் தலைவர்
பேராசிரியர். முனைவர்.ஜி.ரவி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தை பற்றியும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றியும் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டியதின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
இவ்விழாவில் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி.இராஜராஜன்,
பள்ளி முதல்வர் டி.டேவிட் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை பள்ளி தாளாளர் முனைவர்.எம்.எம்.இலியாஸ் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் பள்ளியின் மேலாண்மை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மாறுவேடம் அணிந்து நாட்டுப்பற்று வசனங்கள் பேசினர். இதில் சரசுவதி தேவி, ஜான்சி ராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், இங்கிலாந்து அரசி எலிசபெத், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் போன்று வேடமிட்டு வசனங்கள் பேசி நடித்துக் காட்டினர்.
பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முன்னிலைப் பெற்ற மாணவ மாணவிகள் 50 பேர்களுக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள், மெடல்கள் வழங்கப்பட்டது.
விழாவில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.பாரி, பொருளாளர் எல்.சி.ஆர்.நடராஜன், தலைவர் தேர்வு கோ.நிர்மலா, மற்றும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் முனைவர் சி.யுவராஜ், மற்றும்
பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முனைவர் கே. சின்னையன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி