0 0
Read Time:2 Minute, 56 Second

2026 ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளரை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ரயில்வேயில் புதிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும், ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் நிலுவையில் உள்ளது அந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். இரண்டாவது விமான நிலைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஆறு முறை பாமக அறிக்கை விட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட அன்புமணி, “ஏழை மக்கள் பயன்படுத்தக் கூடியது ரயில்வே மட்டும்தான். ரயில்வே துறை ஏழை மக்களை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த துறை செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

தொடர்ந்து, “மழை வந்தாலே சாபம் போல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அதை வரமாக பார்க்க வேண்டும். அடுத்து பத்து பதினைந்து ஆண்டுகளில் மழை குறைந்துவிடும் என்று தான் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் இருக்கக்கூடிய மழையை நாம் சேமிக்க வேண்டும். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஏரிகளை புதிதாக உருவாக்க வேண்டும். சென்னையில் இடம் இல்லை என்றாலும் மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உருவாக்க வேண்டும்” என்றார்.

மேலும், “ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் பிரச்னை இருக்கக் கூடாது.அவர்கள் பேசி தீர்க்க வேண்டும். இதனால் தமிழ்நாடு மக்களுக்கு தான் பிரச்னை.ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். 2026 ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %