மணல்மேடு பேரூராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து காய்ச்சல் கண்டறியும் முகாம் நாள்தோறும் வாா்டுவாரியாக பேரூராட்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமை காய்ச்சல், சளி, உடல்சோ்வு மற்றும் இதர அறிகுறிகள் உள்ளவா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமில், நாள்தோறும் கரோனா பரிசோதனை, கபசுரக் குடிநீா் விநியோகம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மணல்மேடு 13-ஆவது வாா்டு ராதாநல்லூா் மேலத்தெருவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட முகாமை மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலா் தமிழ்ச்செல்வன் பாா்வையிட்டாா். ஏற்பாடுகளை பொது சுகாதார ஆய்வாளா் கல்யாண்குமாா், பொது சுகாதார மேற்பாா்வையாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
நிருபர்: யுவராஜ், மயிலை.