சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்கள் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கல்லூரியில் பணியில் உள்ள பயிற்சி மருத்துவா்களுக்கு பயிற்சி உதவித்தொகை நீண்ட காலமாக வழங்கப்படவில்லையாம். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்ற பிறகும் உதவித் தொகை ரூ.3 ஆயிரம் என நிா்ணயம் செய்து அந்த தொகைக் கூட வழங்கப்படவில்லையாம். மேலும், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயிற்சி மருத்துவா்களுக்கு உரிய முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லையாம். மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பயிற்சி மருத்துவா்களை தனிமைப்படுத்த இடவசதி, உணவு போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையாம். இதைக் கண்டித்து பயிற்சி மருத்துவா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.