நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 பாகத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ஹைதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், உடல்சோர்வாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், லேசான காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார் எனவும் தற்போது அவர் நலமாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார்.