0 0
Read Time:2 Minute, 19 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். நேரில் கண்ட முதல்வர் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாக்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் உதவி தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் பார்வையிட்ட பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லையை கடப்பதற்கு முன்பே வெள்ள நிவாரணமாக ஆயிரம் வழங்கப்படும் என அறிக்கை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் நேற்று நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், துணைத்தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூர் திமுக கழக செயலாளர் முத்துராஜா, திமுக மாவட்ட பிரதிநிதி சடகோபன் மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி தொகை வழங்கி தொடங்கி வைத்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %