0 0
Read Time:2 Minute, 57 Second

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 100 யூனிட் இலவச மின்சார சலுகையை ஒன்றிய அரசு படிப்படியாக பறிக்கும் என்றும் தமிழக அரசு இந்த நடவடிக்கைக்கு துணை போக வேண்டாம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் முன்வந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் வரையிலான இலவச மின்சார சலுகை பறிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ள விளக்கத்தை சுட்டிக்காட்டியுள்ள கே.பாலகிருஷ்ணன், பிறகு ஏன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப்பயன்பாட்டிற்கான மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்றியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப்பயன்பாடாக பயன்படுத்தப்பட்டு வந்த மின் விளக்குகள், மோட்டார், லிப்ட், ஆகியவற்றுக்கும் 1ஏ என்கிற அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சிறுகுறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வையும், பிக்சட் சார்ஜ் மற்றும் பீக் ஹவர் கட்டணத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %