0 0
Read Time:4 Minute, 30 Second

கடலூர் மாவட்டத்துக்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு ரூ.12 ஆயிரத்து 440 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் தெரிவித்தனர். கடலூர் கடலூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கடலூர் மாவட்டத்திற்கான 2023-24 நிதியாண்டின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை (PLP 2023-24) கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வெளியிட்டனர்.

இதன்படி தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்த கடலூர் மாவட்டத்திற்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தில் 2023-24 நிதியாண்டில் ரூ.12,440.97 கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்துள்ளது. இது நடப்பு ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தை விட சுமார் 18.1 சதவீதம் அதிகம். வளம் சார்ந்த கடன் திட்டமானது, மாவட்டத்தின் வருடாந்திர கடன் திட்டத்தை இறுதி செய்வதற்கு அடிப்படையாக அமைகிறது என்று தெரிவித்தனர். நீண்ட கால கடன்கள் தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா பேசுகையில், அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் தகுந்த பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு கடன் உதவியை விரைந்து வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், மாவட்டத்தில் பண்ணை எந்திரமயமாக்கல், நுண்ணீர் பாசன முறைகள், கால்நடை வளர்ப்புத் துறை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதால், விவசாயத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்களை நோக்கி, அதிக இலக்குகளை வங்கிகளுக்கு ஒதுக்குமாறு அறிவுறுத்தினார். வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் பேசுகையில், இந்த கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டகணிப்பு 2022-23-க்கான கணிப்பை விட 9.79 சதவீதம் அதிகமாக இருக்கிறது. விவசாயத் துறைக்கான மதிப்பீடு 2023-24 -ல் ரூ.9167.40 கோடி (74 சதவீதம்), எம்.எஸ்.எம்.இ.-க்கு ரூ.1344.06 கோடி (11 சதவீதம்) மற்றும் மற்ற முன்னுரிமை துறைக்கு ரூ.1929.50 கோடி (15 சதவீதம்) என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராஹன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர் ராவ், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா முதன்மை அதிகாரி ஸ்வர்ணாம்பாள் சுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா உள்பட பல்வேறு வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %