0 0
Read Time:2 Minute, 48 Second

மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் காவலர்- தீயணைப்புத்துறையினருக்கான எழுத்து தேர்வை எழுதினர். இதனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 2 ஆயிரத்து 625 பேர் காவலர்- தீயணைப்புத்துறையினருக்கான எழுத்து தேர்வை எழுதினர். இதனை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை வார்டன், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மாவட்ட தலைநகரங்களில் தேர்வு நடைபெறுவது வழக்கம். மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதை அடுத்து முதன்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான எழுத்து தேர்வு மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்கு 3 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் 2 ஆயிரத்து 625 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதில் 495 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக தேர்வர்களுக்காக கொண்டுவரப்பட்ட வினாத்தாள் பெட்டிகள் டி.ஐ.ஜி. முன்னிலையில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 12.30 வரை நடந்தது. இந்த தேர்வு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 இன்ஸ்பெக்டர்கள், 42 சப்-இன்ஸ்பெக்டர்கள், 310 போலீசார் மற்றும் 35 அமைச்சு பணியாளர்கள் என்று மொத்தம் 400 பேர் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %