0 0
Read Time:1 Minute, 35 Second

கனமழை காரணமாக விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனிடையே, தேனி, விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ஆனது நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %