பள்ளி மாணவர்களுக்கு நுண்ணறிவுசார் வளர்ச்சிக்கு வானவில் மன்றம். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘ வானவில் மன்றம்’ என்னும் புதிய கல்வி வளர்ச்சி திட்டத்தை அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் துவக்கி வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
வெறும் ஏட்டுக்கல்வியோடு அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வதற்கும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதற்கும், ஏன் அதனையும் தாண்டி உருவாக்குவதற்கும் இளம் மாணவர்களுக்கு தளம் அமைத்துக் கொடுப்பது போல இவ்வானவில் மன்றம் செயல்பட உள்ளது. இத்தனை ஆண்டுகள் இப்படிப்பட்ட வாய்ப்புகள் எந்த மாணவருக்கும் கிடைத்திடவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆற்றல்மிகு மாணவர்களின் சிறப்பு திறனை ஆர்வத்தினை கண்டறிவதுடன் எதிர்கால அறிவியலாளர்களை நிச்சயம் உருவாக்கும் என்பது உறுதி.
நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் தமிழகக் கல்வித்துறையினரையும், ஆசிரிய, ஆசிரியைகளையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெற்றோர்கள் சார்பில் பாராட்டுவதுடன் வானவில் மன்றத்தில் விருப்பமுள்ள திறன்மிகு மாணாக்கர்கள் அனைவரும் இணைந்து புது முயற்சிகளை துவக்கி, தமிழகத்தில் பிறந்து அணு விஞ்ஞானியாக உயர்ந்த ஏவுகனை நாயகர் அப்துல் கலாம் போல உருவாகிட நாமும் ஒத்துழைப்பு நல்கி இதுபோன்ற நல்ல காரியங்களை வாழ்த்துவோம். அதிசயமும் ஆச்சரியமும் நமது மாணவர்கள் நமக்கு பரிசாக விரைவில் திருப்பிக் கொடுப்பார்கள்”.
என்றார்.