0 0
Read Time:4 Minute, 19 Second

கடலூர் மாவட்டம் நெய்வேலி 19-வது வட்டம் செடுத்தான்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முந்திரி விவசாயி ராஜேந்திரன் மகன் அன்புராஜா (வயது 33). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- தங்கத்தில் முதலீடு நெய்வேலி 20-வது வட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் இளங்கோவன். இவர் நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார். அவரும் என்னுடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள். இதை பயன்படுத்திக்கொண்ட இளங்கோவன், எனது தந்தையிடம் நீங்கள் பெரிய அளவில் பணம் கொடுத்தால், நான் அதை தங்கத்தில் முதலீடு செய்து, 2 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி தருவேன் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார். மேலும் எனக்கு இருக்கும் பழக்கத்தில் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி, அதை சுங்கத்துறைக்கு வரி கட்டாமல் அதிக லாபத்துக்கு விற்று பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பிய என்னுடைய தந்தை கடந்த 2010-ம் ஆண்டு நாங்கள் முத்தாண்டிக்குப்பத்தில் கட்டி இருந்த கடையை விற்றும், சீட்டுப்பணம் எடுத்தும் இளங்கோவன், அவரது மனைவி ராஜலட்சுமி, மகன் அருண்குமார் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.70 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்துள்ளார். இதற்கான ரசீதை நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

ஆனால் அவர் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை. இதனால் கொடுத்த பணம் குறித்து இளங்கோவனிடம் கேட்ட போது, அதிக அளவு தங்கம் சுங்கத்துறையிடம் மாட்டிக்கொண்டது. அதை வெளியே எடுக்க நிறைய செலவாகும். அதை வெளியே எடுத்த பிறகு, சொன்னபடி பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன் என்று கூறினார். ஆனால் அவர் சொன்னபடி பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில் கடந்த 8.8.2011 அன்று எனது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு நான் சென்று பணத்தை கேட்டபோதெல்லாம், என்னிடமும் அதே காரணத்தை கூறி ஏமாற்றி வந்தார். இதையடுத்து நான் கடந்த 8.10.2022 அன்று இளங்கோவன் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்ட போது, பணத்தை தரமுடியாது என்று, அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஆகவே எங்களை ஏமாற்ற வேண்டும் என்று அவரும், அவரது குடும்பத்தினரும் செயல்பட்டு உள்ளனர்.

ஆகவே ரூ.70 லட்சத்து 70 ஆயிரத்தை மோசடி செய்த அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 3 பேர் மீது வழக்கு மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இளங்கோவன், ராஜலட்சுமி, அருண்குமார் ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர், முந்திரி விவசாயியை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %