சிதம்பரம் சார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர் வக்பு வாரிய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டனார் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை பூத்க்கேணிமற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இடம் வாங்கி வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானவை எனவும் சம்பந்தப்பட்ட இடங்களை வீடுகளை பத்திர பதிவு செய்ய கூடாது எனவும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களையோ வீடுகளையோ பத்திரப்பதிவு செய்யக்கூடாது வக்பு வாரியம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திடீரென சுற்றறிக்கை அனுப்பி உள்ளது காரணமான பல ஆண்டுகளாக வசித்து வந்த ஏழை எளிய மக்கள் தங்கள் சொத்துக்களை விற்க முடியாது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் சிதம்பரம் சார் ஆட்சி அலுவலரின் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வக்கீல் சண்முகசுந்தரம் பள்ளிப்படை ஜமாத் தலைவர் ஜாபர் அலி செயலாளர் சலாவுதீன் ஆகிய தலைமையில் திரண்டு வந்த பொதுமக்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி