0 0
Read Time:5 Minute, 5 Second

அம்பேத்கர் படத்திற்கு காவி சாயம் பூசியது தொடர்பாக வருகிற 12-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என திருமாவளவன் கூறினார்.

மதுரை பெருங்குடி விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் வெங்கல சிலையினை நாளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை விமான நிலையம் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையினை நாளை முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றார்.

மேலும், டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினத்தன்று சன்பரிவாளர்கள் அமைப்பையே சார்ந்தவர்கள் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதாகக் கூறி அவரை இழிவு படுத்தி உள்ளனர். சன்பரிவாளர்களின் அமைப்புகளின் ஒன்றான இந்து மக்கள் கட்சி கும்பகோணத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தில் காக்கி சட்டை உடுத்தி விபூதி இட்டு அவரை இந்து அமைப்பினர் போல் சித்தரித்து நகரம் முழுவதும் ஒட்டினார்கள் என பேசினார்.

அத்துடன், இந்த போக்கு மிகவும் ஆபத்தானது அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையிலும் அம்பேத்கர் இயக்கங்களை வம்பு இழுக்கும் வகை செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவர், தந்தை பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசினார்கள் தற்போது சன் பரிவர்த்தன அமைப்புகள் அம்பேத்கருக்குக் காவி சாயம் பூசி உள்ளனர். எனவே இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வருகிற திங்கட்கிழமை 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் கூறினார்.

மேலும், இத்தகை போக்குகளை பாஜக உள்ளிட்ட சன்பரிவாளர்கள் கைவிட வேண்டும் இவ்வாறு சமூக பதட்டத்தை ஏற்படுத்துவார்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திகிறோம். குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை இருக்கிறது ஆனால் காங்கிரசை ஆட்சியில் அமர செய்வார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது என்றார்.

மேலும், பெரும்பான்மையான இடத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அங்கு ஜனநாயகம் முறையில் நடந்து கொள்ளுமா என்பதில் அச்சம் உள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரித்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது இதுபோன்று வாக்குகள் சிதறாமல் எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணைந்து பாஜகவைத் தனித்து நிறுத்தித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிற செய்தியாகும் என் பேசினார்.

அத்துடன், இது ஆம் ஆத்மிக்கு விடுதலை சிறுத்தைகள் கொடுக்கும் வேண்டுகோள் மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்பது மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இருவரும் இணைந்து தேர்ந்தெடுக்கும் பெயரை நாங்கள் ஆதரிப்போம் என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %