மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா, மயிலாடுதுறை மேற்பார்வையாளர் பி.எம். பாபு முண்ணிலையில் தமிழ்நாடு வேளான் உழவர் நல துறையின் நல திட்டங்களையும், மின்னணு தேசிய வேளாண் விற்பன்னை சந்தை திட்டம் பற்றியும் விற்பனை கூட வசதிகள் இடை தரகர்கள் இன்றி விற்பனை செய்து விவசாயிகள் தங்களின் விளைப்பொருட்களை விற்று அதிக லாபம் ஈட்டுவது பற்றியும் திருபூண்டி மேற்பார்வையாளரும் நாகை விற்பனை குழு அலுவலர் சங்க தலைவர் தட்ணாமூர்த்தி விளக்கி கூறினார் மேலும் இந் நிகழ்சியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து பல விவசாயிகளும், கிராம முக்கியத்தர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளையும் தெரித்தனர்.
மேலும் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலர்கள் எம். முத்துகுமரன் , அகோரமூர்த்தி, மதியழகன் ஆகியோர் விவசாயிகள் இல்லம் தோறும் சென்று நல திட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினர் இந் நிகழ்ச்சி முன்னதாக விவசாய பிரதிநிதிகளான பெரியவர் சின்னபிள்ளை, பரம சிவம் அலுவலர்களையும், விவசாய நண்பர்களையும் வரவேற்று சில கோரிக்கையும் முன் வைத்தனர் இந் நிகழ்ச்சி முடிவில் நாகை விற்பனை குழு அலுவலர் சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்