சிதம்பரத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினற்கு அஇஅதிமு.க சார்பில் நிவாரணம் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பள்ளிப்படை ஊராட்சி, வண்டிகேட் பகுதியில் மீதிகுடி வாய்கால் ஓரம் சுமார் 50 ஆண்டுகளாக 20 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இவர்களது குடியிருப்புகள் கடந்த 02.12.2022 அன்று பொதுப்பணித்துறையினரால் அகற்றப்பட்டது. வீடுகளை இழந்த குடும்பத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நிவாரண உதவிகள் வழங்கி பேசுகையில்,
“சிதம்பரம் மற்றும் சுற்றுபுற பகுதியில் தில்லையம்மன் ஓடை, ஞானபிரகாசம் குளம், நாகசேரி குளம், ஓமகுளம், தச்சன் குளம், மீதிகுடி வாய்கால் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட குளக்கரைகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் நீர் நிலைகளை சுற்றி ஆக்கரமித்து வீடுகள் கட்டி உள்ளனர் என்று நீதிமன்ற உத்திரவின் படி பொதுப் பணித்துறையினரால் வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்படனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிதர வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றது. விரைவில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்ள். தற்போது மீதிகுடி வாய்காலில் ஆக்கறமிப்புகளை அகற்றும் போது வீடுகளை இழந்த இந்த 20 குடுபங்களுக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கிடைத்திட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்”.
அப்போது மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை ஏ.வி.சி.கோபி, ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் வீரமணி, தீன.வெங்கடேசன், சரவணன், ஒன்றிய கழக அவைத் தலைவர் சேட்டு, கிளை செயலாளர் மாரியப்பன், ஒன்றிய ஐ.டி.விங் செயலாளர் ஜெயவேலன், நிர்வாகிகள் பந்தல் ராதா , புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி