0 0
Read Time:3 Minute, 9 Second

செம்பனார்கோயில் அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள்
பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.

செம்பனார்கோயில், டிச.21,
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் (2022-23) மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் சேகர் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்பு உரையாற்றினார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சுமார் 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகளை வழங்கி பேசினார். அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை துறையினர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் செம்பனார்கோயில் வட்டாரத்தில் உள்ள திருச்சம்பள்ளி, செம்பனார்கோயில், ஆலவெளி, மேமாத்தூர், மடப்புரம் , ஆக்கூர் , மாணிக்கப்பங்கு, கருவாழக்கரை உள்ளிட்ட 14 கிராமங்களை தேர்வு செய்து, மேற்படி கிராமங்களில் விவசாயம் செய்யப்படாமல் தரிசாகி கிடக்கும் நிலங்களை சீர்ப்படுத்தி மீண்டும் விவசாயம் செய்யும் நிலமாக மாற்றப்படவுள்ளது என்று கூறினர்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வேளாண்மை துறையினர், திமுகவினர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %