0 0
Read Time:3 Minute, 14 Second

மாற்றுத்திறனாளி 10,+2 மாணவர்களுக்கு உதவிட உடனடியாக முகாம் நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி!

அவர் குறிப்பிடுகையில்,

மாற்றுத்திறனாளி 10,+2 மாணவர்களுக்கு மருத்துவச் சான்று வழங்கிட அலைக்கழிக்காமல் உதவிட வேண்டும் என்று நாம் முன்வைத்த கோரிக்கையை உடனே ஏற்று, உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் தேர்வர்களுக்கான மருத்துவ முகாம்களை மயிலாடுதுறையிலேயே நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் அவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. அவ்வாறு திருவாரூர் செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடியாக அச்சான்று வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதுடன், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாக தமிழக முதல்வருக்கும், கல்வித்துறை அமைச்சருக்கும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் இரு தினங்களுக்கு முன்பு கோரிக்கை அனுப்பி இருந்தார்.

உடலாலும் மனதாலும் கஷ்டப்படுகின்ற மேற்படி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உள்ளூரிலேயே மருத்துவச் சான்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதனை ஏற்று உடனடியாக மயிலாடுதுறை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டிசம்பர் 24ஆம் தேதி திருவாரூர் செல்லாமல் மயிலாடுதுறையிலேயே நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து முகாம் நடத்த உத்தரவிட்ட முதல்வருக்கும் கல்வித் துறை அமைச்சருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %