பரங்கிப்பேட்டை:தற்காலிக பட்டாவை அரசு பட்டா பதிவேட்டில் திருத்தம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உள்ள பஞ்சங்குப்பம் கிராமத்தில் ரோட்டு தெருவில் 28 நபர்களுக்கு 2000 ஆண்டில் கொடுத்த தற்காலிக பட்டாவில் வீடு கட்டி வாழும் பொது மக்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் அப்பகுதியை அளந்து காலி செய்ய இருப்பதாக கேள்விப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் பஞ்சங்குப்பம் கிராமத்திற்கு நேரில் சென்று அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயராஜா தலைமையில் பொதுமக்கள் ஒன்று கூடி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் 2000 ஆண்டு கொடுத்த தற்காலிக பட்டாவை அரசு பட்டா பதிவேட்டில் திருத்தம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள்.
மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார் .சட்டமன்ற உறுப்பினருடன் ஒன்றிய செயலாளர் கோ வி ராசாங்கம் கூட்டுறவு சங்க தலைவர் வசந்த் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத்தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி