கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலையால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மலேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட 14 நாடுகளின் கடற்கரையோரம் வசித்த மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொண்ட சுனாமிக்கு தமிழகத்தில் பத்தாயித்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 6000 பேர் பலியான பரிதாபம் நிகழ்ந்தது.
ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் சீர்காழி தாலுகா பழையார் கடற்கரையில் அனுசரிக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் மாவட்டத் தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் சபரி லிங்கம், துணை செயலாளர் அம்மன் சங்கர் நிர்வாகிகள் அசுபதி, பாலகுரு, சௌந்திரராஜன், வெற்றிச் செல்வன், கோகுல், மூவேந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.