0 0
Read Time:4 Minute, 35 Second

செம்பனார்கோயில், டிச.30;
திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அண்ணா திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், மகேந்திரன், கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மகளிர் திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார். விழாவில் ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கினர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழக முதல்வர் மகளிர் மேம்பாட்டிற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களில் ஒன்றாக மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து வட்டாரங்களில் 5857 மகளிர் சுயஉதவி குழுக்களும், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகள் உள்ளிட்ட ஆறு நகர்புற அமைப்புகளில் 735 அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்களும் என மொத்தம் 6592 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்குழுக்களுக்கு கடந்த 2021-22 ம் ஆண்டு நிதியாண்டில் ரூ.301 கோடி அளவில் கடன் உதவி வழங்கப்பட்டது. நடப்பு 2022-23 நிதியாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.226.85 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு நடைபெற்ற விழா வில் 652 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ 7.69 கோடியும் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுயதொழில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெறும் இந்த கடன் தொகை பயனுள்ளதாக இருக்கும். புதன்கிழமையுடன் மயிலாடுதுறை மாவட்டமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மயிலாடுதுறை மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பிஎம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், மங்கை சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %