குத்தாலம், டிசம்பர்- 30;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு சார்பில்
குத்தாலம் சேத்திரபாலபுரம், தொழுதலாங்குடி, தேரழந்தூர், கோமல், கங்காதாரபுரம் , பொரும்பூர், ஆட்டூர், மங்கைநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா தலைமையில் தேசிய மின்னணு வேளாண் சந்தையை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மயிலாடுதுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பி.எம். பாபு, நாகை விற்பனை கூட மேற்பார்வையாளர் விக்ணேஷ் முன்னிலை வகித்தார். தலைமை அலுவலக பொறுப்பானவர் சிலம்பரசன் விவசாயிகளிடம் தேசிய மின்னணு வேளாண் திட்டம் மற்றும் பயன்கள் கூறித்து விளக்க உரையாட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் விவசாயிகள் தங்களின் அனைத்து விதமான விளைபொருட்களையும் விற்பனை கூடங்களில் விற்று இடை தரகர் இன்றி நல்ல விலை பெற்றிட விற்பனை கூடம் வந்து தேசிய மின்னணு சந்தையின் மூலம் பயன் அடைய அழைப்பு விடுத்தனர். மேலும் விற்பனை குழு அலுவலர்கள் எம்.முத்துக்குமரன் , கோகுல் ஆகியோர் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பயன்கள் கூறித்து விளக்கினர். முடிவில் கங்காதாரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா பாஸ்கரன் நன்றியுரை ஆற்றினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்