0 0
Read Time:2 Minute, 58 Second

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் டிச 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழர்களின் பரம்பரியகலைகளான சிலம்பம் மற்றும் சுருள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் கடலூர் மாவட்ட செயலாளர் உத்திராபதி தலைமை தாங்கினார். போட்டியின் முதல்நாளில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் மற்றும் பதிவாளர் சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள சென்னை, மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, தர்மபுரி, திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5 வயது முதல் 25 வரை உள்ள மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியின் 2-வது நாளில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி விளையாட்டு அரங்கில் திங்கள் மாலை நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு துறை முதல்வர் குலசேகர பெருமாள்பிள்ளை, துறை தலைவர் செந்தில்வேலன், டி எம் ஏ பவுண்டேஷன் மலேசிய நாட்டின் நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மயில்வாகனம், சிவக்குமார், விஜயசேரன் மற்றும் தமிழகத்தின் தலைவர் முருகபாண்டி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், கடலூர் மாவட்ட தலைவர் ராஜதுரை, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பாஸ்கரன் மற்றும் பவுண்டேஷன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற சிதம்பரம் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்பப் பள்ளிக்கு முதல் பரிசையும், புவனகிரியில் உள்ள தமிழர் சிலம்பப் பள்ளிக்கு இரண்டாம் பரிசை வழங்கினார்கள்.இதில் ஏப்ரல் மாதத்தில் மலேசியா நாட்டில் நடைபெறும் போட்டியில் உலக அளவிலான போட்டியில் கலந்துகொள்ள 150-க்கும் மேற்பட்டவர்கள்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %