0
0
Read Time:1 Minute, 15 Second
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் சில பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, தேனி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மேலும், நாளை முதல் 11-ம் தேதிவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் காரணமாக இயல்பு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.