நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் கொறடா ஜேம்ஸ் விஜயராகவன் வரி வசூல் செய்யும் நகராட்சி ஊழியர்கள் காலக்கெடு வழங்க வேண்டும் பகுதிநேர ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் உயிர் வழங்க வேண்டும் கோரிக்கைகளை முன்னிறுத்தினார்.
நகரமன்ற தலைவர் உரிய கால அவகாசம் அளித்து மக்களிடம் வரி வசூல் செய்ய வேண்டும் நகரில் சுற்றி தெரியும் பன்றிகள் நாய்கள் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிதம்பரம் நகரில் 33 வார்டுகளில் குழாய்கள் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும்.
சிதம்பரம் நகரில் புதிய பேருந்து நிலையம் வணிக வளாகம் கட்டுதல் சாலைகளை சீர்மைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியை நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் உறுப்பினர்கள் மூத்த நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் அப்பு சந்திரசேகர் தில்லை ஆர் மக்கீன் சுதாகர் ஏ ஆர் சி மணிகண்டன் சி.க ராஜன் உள்ளிட்டவர் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி