0 0
Read Time:2 Minute, 43 Second

மயிலாடுதுறை, ஜனவரி- 10;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி புகை இல்லா போகி விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை நகராட்சி, மிட்டவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பசுமைப்படை தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து மாபெரும் பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை நகராட்சி மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை பூமிக்கு பகை, எரிப்பதை உடன் தவிர்ப்போம், பூமித்தாயை காப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், சுகமாக வாழ்வோம், பசுமை உலகம் படைப்போம், காற்று மாசு தவிர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.

பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், துணிகள் போன்றவைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும், புகையில்லாத போகிப் பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணியில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ-பாலாஜி, மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் கந்தன், ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார், பசுமைப்படை பொறுப்பாளர்கள் ஆசிரியர் செல்வகுமார், அறிவழகன், நகர மன்ற உறுப்பினர்கள் ரஜினி, காந்தி மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %