தரங்கம்பாடி, ஜனவரி- 09;
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை நேற்று சென்னையில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின் பேரில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர், T.மணல்மேடு, தில்லையாடி, திருவிடைகழி, எடுத்துக்கட்டி சாத்தனூர், மாத்தூர், முக்கரும்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் அரசு அறிவித்த பொங்கல் பரிசினை செம்பை ஒன்றிய செயலாளர்கள் எ.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன் ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எம் சித்திக், ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமாலதி சிவராஜ், ரங்கராஜன், நாகராஜன் என்கிற ராஜா, பைலட், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார், செம்பை ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் இரா.செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்