0 0
Read Time:2 Minute, 48 Second

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக இன்று முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் 18ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இன்று முதல் 14ம் தேதிவரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,632 பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருந்துகளும் பிற முக்கிய நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதற்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்றுமுதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகள் முழுமையாக நிரம்பினால் மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %