கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்,
ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2,500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 ரவுடிகள் கைது அந்த வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, பொது இடங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 24 ரவுடிகள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 பழைய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.
இதில் 4 பேர், உட்கோட்ட நிர்வாக நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை மீறியதற்காக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள 76 ரவுடிகளின் இருப்பிடத்தை, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.