0 0
Read Time:4 Minute, 50 Second

2023-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் நான்கு இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2023 ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாட்களே உள்ளன. அகாடமியின் உறுப்பினர்கள் இந்த ஆண்டு சிறந்த திரைப்படப் பரிசுகளுக்கான ஓட்டத்தில் யார் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் டிசம்பரில் 10 பிரிவுகளுக்கான ஷார்ட்லிஸ்ட்கள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவிலிருந்து நான்கு படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. ஜனவரி 24 ஆம் தேதி வெளிவரவுள்ள இறுதி அறிவிப்புக்கு முன்னதாக, தற்போது இடம்பெற்றுள்ள இந்திய படங்கள் எவை எவை என்பதை காண்போம்.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பரிந்துரை பட்டியலில் குஜராத்தி மொழித்திரைப்படமான செல்லோ ஷோ (Chhello Show) இடம்பெற்றுள்ளது. இயக்குனர் பான் நளினின் இயக்கியுள்ள இத்திரைபபடம் ஆஸ்கார் விருதுகளின் சர்வதேச சிறப்புத் திரைப்படத்தின் இறுதிப் பட்டியலில், நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்காக பரவலான பாராட்டைப் பெற்று இடம்பெற்றுள்ளது.

RRR திரைப்படத்தில் உள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட உள்ளது. இப்பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் மற்றும் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் என்ற இரண்டு பெரிய விருதுகளை வென்றுள்ளது. இதுதவிர சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான இரண்டாவது விமர்சகர்கள் தேர்வு விருதையும் வென்றுள்ள நிலையில், தற்போது ஆஸ்கார் விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட உள்ளது.

சிறந்த ஆவணப்படத்திற்கு ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்படமும், சிறந்த ஆவண குறும்படத்திற்கு கார்த்திகி கோன்சால்வ்ஸின் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற படமும் பரிந்துரைக்கப்பட உள்ளது. இதில் இரண்டு சகோதரர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் பருந்துக்கும் இடையிலான ஈரமும் நேசமும் நிறைந்த அன்றாட வாழ்வின் வழியே தில்லியின் கொடூர முகமும், சூழலியல் ஆபத்துகளும் நமக்கு உணர்த்தப்படுக்கின்ற விதமாக வெளிவந்த ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற திரைப்படம் மே 2022- ஆம் ஆண்டு நடந்த 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் விருதை வென்றது.

இது தவிர ரகு என்ற யானைக் குட்டியைப் பராமரிப்பதில் நேரத்தைச் செலவிடும் தம்பதியினரின் வாழ்க்கையை ஆராயும், ஒரு சாத்தியமற்ற குடும்பத்தை உருவாக்குவதுபோல் காட்டப்பட்டிருக்கும் மற்றொரு இந்திய ஆவணப்படமான , கார்த்திகி கோன்சால்வ்ஸின் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறும்பட ஆவணப்படத்தை ஆதரித்த தயாரிப்பாளர் குணீத் மோங்கா, நாட்டின் சினிமா உலகளவில் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %