“அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் மந்த நிலை காரணமாக பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுகின்ற கணினி நிபுணர்கள், தொழிலாளர்கள், ஊழியர்களை பாதிக்கு மேல் குறைத்து வருவதை கடந்த சில மாதங்களாக காண முடிகின்றது. அந்த வகையில் அமேசான், சேல்ஸ்போர்ஸ். மெட்டா, ட்விட்டர், உபெர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிவாய்ப்பு இழந்த இந்தியாவைச் சார்ந்த எண்ணற்ற எச்1 டீ மற்றும் எல்1 விசாக்களை பெற்ற இளைஞர்கள் அடுத்த சில நாட்களுக்குள் வேறு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சட்டப்படி நாடு திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் இப்பிரச்சனையில் அதிகமாக சிக்கியுள்ளார்கள். தமிழக அரசை பொருத்தவரை அயலக பணியாளர்களுக் என்று தனியாக அமைப்பினை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளதால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஐடி ஊழியர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பணியை விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்னும் நம்பிக்கை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கனவுகளுடன் அமெரிக்கா சென்ற இளைஞர்கள் வேலையை திடீரென்று இழந்ததால் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆகவே நம்பிக்கை ஏற்படுத்தும் முதற்கட்ட முயற்சி மிகவும் அவசியம் தேவை. அடுத்தபடிப்படியாக அவர்கள் குறைகள் நிவர்த்தி செய்ய அரசு முற்பட வேண்டும்”.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.