0 0
Read Time:2 Minute, 18 Second

தரங்கம்பாடி, ஜனவரி- 25;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு சின்ன மேடு மீனவ கிராம மக்கள் 150 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை ஒன்றிய திமுக செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், எம்.அப்துல் மாலிக், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, காலமநல்லூர் ஊராட்சித் தலைவர் நடராஜன் மற்றும் இரு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், பிரதிநிதிகள், மீனவர்கள் திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %