0 0
Read Time:3 Minute, 35 Second

இந்தியாவின் 74 -வது குடியரசு தினம் விழா சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் நெல்லுக்கடை பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற இந்தியாவின் 74 -வது குடியரசு தின விழாவிற்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான தில்லை ஆர். மக்கின் தலைமை வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஜி.கே. குமார் வரவேற்றார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம் என் ராதா பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார் நகர செயல் தலைவர் தில்லை கோ குமார் மாவட்ட செயலாளர் நெல்சன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் மஞ்சுளா தில்லை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பி. பி .கே. சித்தார்த்தன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.மூத்த தலைவர் தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன் இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.நூர்அலி மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.சம்மந்தமூர்த்தி வி. சண்முகசுந்தரம் மாவட்ட செயலாளர் ஆர்.வி. சின்ராஜ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான் நகரப் பொருளாளர் மிஸ்கின் பாய் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அபு சையத் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகுமார் கலை பிரிவு தலைவர்கள் பொன். மாதவ ஷர்மா கே.என். நாராயணசாமி அபு தாஹிர் என் ஆனந்தன் சைய்யத் அமீர் காசிம் பாய் கே.வி.எம். கிருஷ்ணன் பி. ஞானபிரகாசம்
மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் ஜனகம் ராதா அழகர் மாலா ஹேமா விஜயா சித்தார்த்
உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இவ் விழாவின் முடிவில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் இந்திரா தேவதாஸ் நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து இளமையாக்கினார் கோவில் தெருவில் நடைபெற்ற 74-வதுகுடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஜமாத்தார் தலைவர் செல்லப்பா என்கின்ற ஆர். முஹம்மது ஜியாவுதீன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் பி பி கே சித்தார்த்தன் இனிப்பு வழங்கினார். இவ் விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %