0 0
Read Time:3 Minute, 43 Second

தமிழில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்று தேர்வானால் தான் பணி கிடைக்கும்
என்ற தமிழக அரசின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என டி.என்.பி.எஸ்.சி தேர்வு
எழுத வந்த தேர்வர்கள் தெரிவித்தனர் .

தமிழ்நாடு பொது துணை நிலை சேவைகள், பொது சுகாதார துணை நிலை சேவைகளின் கீழ் வரும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது. உதவி புள்ளியியல் ஆய்வாளர், கம்பியூட்டர் ஆபரேட்டர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை பூர்த்தி செய்ய இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி , காலியாக உள்ள புள்ளியியல் பணியாளர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 11, 870 ஆண்கள் , 23,416 பெண்கள் என மொத்தம் 35,286 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வு 15 மாவட்டங்களில் 126 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது. குறிப்பாக, சென்னையில் 18 இடங்களில் நடைபெறும் இந்த தேர்வை 4,608 பேர் எழுதுகின்றனர். சென்னை பிரஸிடென்ஸி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 260 பேர் தேர்வை எழுதுகின்றனர் .புள்ளியியல் அல்லது கணித பட்டப் பாடத்தை அடிப்படையாக கொண்டு முதல் தாள் மற்றும் தமிழ்த் தகுதித் தேர்வு, பொது அறிவு உள்ளிட்ட பொதுவான கேள்விகள் கொண்ட இரண்டாம் தாள் என இரண்டு பிரிவாக இந்த தேர்வு நடைபெறுகிறது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட், பேனா, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை தவிர வேறு எந்த பொருள்களையும் எடுத்து செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத வந்த தேர்வரான திருநின்றவூரை சேர்ந்த காயத்திரி கடந்த மூன்று மாதங்களாக இந்த தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்ததாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசு தமிழில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்று தேர்வானால் தான் பணி
கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது ஒரு நல்ல முன்னெடுப்பு என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய, பெரியபாளையத்தை சேர்ந்த தாரணி என்பவர், முதல் முறையாக தான் இந்த தேர்வை எழுத உள்ளேன். புள்ளியியல் அல்லது கணிதம் சார்ந்த கேள்விகள் முதல் தாளில் கேட்கப்படும். நான் கணித பாடத்தை இதில் தேர்வு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %