0 0
Read Time:2 Minute, 49 Second

சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

முதியவர்கள்,பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்கின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்கவும்.

கடந்த 19.01.2023 தேதி விருதாச்சலம் தாலுகாவில் வங்கியில் பணம் எடுத்துச் சென்ற முதியவரிடம் கீழே உங்களுடைய பணம் கிடப்பதாக சொல்லி கவனத்தை திசை திருப்பி முதியவரிடமிருந்து பணத்தை திருடி டூவிலரில் சென்றுவிட்டார்கள். இதேபோன்று நம் சிதம்பரத்திலும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

எனவே வங்கியில் பணம் எடுக்க வரும் முதியோர்களை குறி வைத்து இவர்கள் பெரும்பாலும் திருட திட்டமிடுவதால் பொதுமக்கள் தயவு செய்து கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம், வங்கியில் இருந்து எடுத்த பணத்தை உடனே வீட்டில் சென்று வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் மற்ற வேலைகள் மளிகை கடைக்கு செல்வது டீ குடிக்க செல்வது காய்கறி கடைக்கு செல்வது ஆகியவற்றை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் டூவீலரின் பெட்டியில் அல்லது முன் பக்க ஊக்கில் மாட்டி தொங்கவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

திருட்டை தடுக்க உடன் குடும்பத்தார்களையோ உறவினர்களையோ,நம்பிக்கை உரியவர்களே அழைத்து வருவது மிகச்சிறந்தது.

மேலும் தகவலை உங்களின் பெற்றோர்கள் நண்பர்கள் நண்பர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் அறிந்து கொள்ளும்படி தெரிவிக்குமாறு சிதம்பர உட்கோட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சந்தேக நபர்களைப் பற்றி கீழக்கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

9498100561 9498100562
9442189333
9498154452
8637680771
9498154719

இவ்வாறு சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %