மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் கோவில் அருகில் காவேரியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பாலத்தின் தெற்குப்பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அவ்வழியாக செல்கின்ற மாணவர்கள், இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. பல நாட்களாக இருந்து வந்த இந்த பிரச்சனை குறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், உடனே சீரமைத்து தர கோரிக்கையை முன் வைத்தார்.அதனை செய்தி,ஊடகங்கள் வெளியிட்டன. அதனை அடுத்து அருகிலுள்ள தீப்பாய்ந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி
அக்கோயில் சார்பிலேயே இப்பாலத்தில் இருந்த பள்ளங்கள் இன்று மூடப்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டது. இச்செயலால் அப்பாலத்தை பயன்படுத்துகின்ற அனைவரும் எவ்வித சங்கடமும் இன்றி கடந்து செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் செய்யாத இச்செயலை தனது கோரிக்கையை ஏற்று பள்ளங்களை மூடி பொதுமக்களுக்கு பேருதவி புரிந்த தீப்பாய்ந்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குழுவினருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் குறைகளை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கினை கண்டிப்பதுடன் எதிர்காலத்திலாவது சிறு சிறு குறைகளை அதிகாரிகளே தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்ற பொழுது விரைந்து நிறைவேற்றித் தர இனியாவது முயல வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.