0 0
Read Time:1 Minute, 48 Second

மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் ஆர் பாபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.100 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விலைமதிப்பில்லாத வாக்குகளை எவ்வித ஆசை பாசத்திற்கும் அடிபணிந்து கொடுத்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தியும், திறமையான நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடும் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய “தேர்தல் வந்தாச்சு” குறும்படத்தை வட்டாட்சியர் விஜயராகவன், பண்ணைபாலு, வேதநாயகம், சிவக்குமார், சிவப்பிரகாசம், கீர்த்தி, லோகு ஆகியோரின் நடிப்பில் உருவாக்கப்பட்டது. அதனை மயிலாடுதுறை நகராட்சி தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ் வெளியிட நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி பெற்றுக்கொண்டார்.

சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், இயக்குனர் ஆர்.ஆர். பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பண்ணைபாலு, குருசங்கர், எலந்தகுடி இக்பால், ஜெயப்பிரியாரவீந்திரன், பொறியாளர் அஸ்வின்ராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %