“கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்” என்ற திட்டத்தை தொடங்கிய வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்யும் வகையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார்.
இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் இன்று பகல் 12 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வரவுள்ளார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கிருந்து கார் மூலம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் செல்லவுள்ளார். அங்கு, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி வகுப்பறை கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்கவுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் காட்பாடியில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் தங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பிறகு மாலை 5 மணியளவில் விஐடி பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார். பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோல் தொழிலதிபர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் குழுவினரை சந்திக்கவுள்ளார்.