0 0
Read Time:2 Minute, 8 Second

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது. 1951-ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நிறைவுற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கரம் புறப்பாடு செய்யப்பட்டு காலை 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

செய்தியாளர்:க சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %