0 0
Read Time:2 Minute, 41 Second

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்கள் மற்றும் ஹவால்தார் போன்ற காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

மேலும் முதல் முறையாக பணியாளர் (எஸ்.எஸ்.சி.) தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த பணிக் காலியிடங்களுக்கு https://ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக வருகிற 17.2.2023 வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்படும். எனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 94990 55908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %