கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு
பிப்.6- கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடற்தகுதி தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு அளத்தல், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. 8, 9, 10-ந்தேதிகளில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் நடக்கிறது.
350 பேர் பாதுகாப்பு
இந்த தேர்வு நடக்கும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. தேர்வு நடக்கும் இடத்தில் மருத்துவக்குழுவினர், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காவலர் பணிக்கான தேர்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையே நேற்று இந்த பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எங்கெங்கு, எத்தனை பேர் பணியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கேட்டறிந்தார். வெளி நபர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்வதோடு, அதற்கான நியமிக்கப்பட்ட வீடியோகிராபர்களும் பதிவு செய்ய வேண்டும்.
எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் தேர்வை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஆணைகள் வழங்கி, அவர்கள் எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு அளத்தல், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. 8, 9, 10-ந்தேதிகளில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் நடக்கிறது.
இதற்கிடையே நேற்று இந்த பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எங்கெங்கு, எத்தனை பேர் பணியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கேட்டறிந்தார். வெளி நபர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்வதோடு, அதற்கான நியமிக்கப்பட்ட வீடியோகிராபர்களும் பதிவு செய்ய வேண்டும்.
எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் தேர்வை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஆணைகள் வழங்கி, அவர்கள் எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.