திருக்கடையூர், பிப்ரவரி-07:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 5-ஆம் தேதி மகா கணபதி ஹோமம் செய்யப்பட்டு ருத்ரா யாகம் முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று.
தொடர்ந்து மகா ருத்ரா பராயானம் நடைபெற்று. பூர்ணகாதி செய்யப்பட்டு கடம புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம்வந்து அமிர்தேடேஸ்வரர், அபிராமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்