மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த சந்திரகாசு சகுந்தலா இவர்களின் மகன் மணிமாறன் (23 வயது ) இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இடது கை செயல்படாமல் போயிற்று, மணிமாறன் குழந்தை பருவத்தில் இருக்கும் போதே அவர் தந்தை சந்திரகாசு இறந்துவிட்டார். மணிமாறனின் தாய் தான் விவசாய கூலி வேலை செய்துதான் மணிமாறனை கஷ்டப்பட்டு வளர்த்தார். இந்த சூழ்நிலையில் இவருக்கு உடலை பாதிப்பு ஏற்பட்டதால் பல மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்த்தும் எந்த பயனும் ஏற்படாத சூழ்நிலையில், ஊனமுற்றோர் என்று சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பம் செய்கிறார்கள். 2021ல் எல்லா மருத்துவ ஆவணங்களையும் சரி பார்த்து ஊனமுற்றோர் என்று சான்றிதழ் வழங்குகின்றனர்.
அரசு அறிவிக்கும் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை மணிமாறனுக்கு கிடைக்கும் என்று அந்த சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரைக்கும் அரசு மூலமாக நாங்கள் எந்த உதவி தொகையும் பெறவில்லை என்று கண்ணீர் மல்க மணிமாறனின் தாயும் மணிமாறனும் தெரிவித்தார்கள்.
மணிமாறனின் தாய் சகுந்தலா கூறியதாவது
“நாங்கள் எனது மகன் மணிமாறனுக்காக இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேல் குழுவின் மூலம் கடன் பெற்று பெற்று மருத்துவ செலவு செய்து கடன் காரர்களாக உள்ளோம். மணிமாறன் பெயரில் கூட்டுறவு 25 ஆயிரம் கடன் பெற்றோம், அதை திருப்பி செலுத்த வேண்டி தற்பொழுது கூட்டுறவு வங்கி மேலாளர் அழுத்தம் கொடுத்து வருகிறார். நாங்கள் பெற்ற கடன் தானே எனது பிள்ளை மருத்துவ செலவுக்கு தானே வாங்கினேன் கண்டிப்பாக கட்டி விடுகிறேன் என்று கூறினேன் என்றார்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தீர்களா என்று நான் கேட்டேன். ஆனால் அதற்கு நாங்கள் யாரையுமே சந்திக்கவில்லை, யாரும் சந்திக்க வேண்டும் என்று கூறவும் இல்லை, அது மட்டுமல்லாமல் எங்களது மகன் இப்படி பிறந்ததற்கு மாவட்ட ஆட்சியர் என்ன பண்ணுவார் என்று வெள்ளிந்தியாக பதிலளித்தார்.
பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுங்கள் என்று எங்க தரப்பில் கூறினேன். சரி நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்கிறோம் என்னுடைய மகனுக்கு உதவித்தொகை மற்றும் வேலை ஆட்சியரிடம் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்